• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளிக்கு ஹெல்மெட் அணிந்து வந்த ஆசிரியர்கள்!

July 21, 2017 தண்டோரா குழு

தெலங்கானா மாநிலத்தின் பள்ளி கட்டடம் பாழடைந்த நிலையில் இருப்பதால், அங்கு பணிக்கு வரும் ஆசிரியர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் மேடக் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் பாழடைந்த நிலையில் இருக்கிறது. அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், தங்கள் பாதுகாப்பிற்காக தலையில் ஹெல்மெட் அணிந்துக்கொண்டு பள்ளிக்கு வருகிறார்கள்.

பள்ளியின் மோசமான நிலையை குறித்து ஆசிரியர்கள் ஏற்கனே சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளியின் மோசமான நிலை மற்றும் அதனால் ஏற்படும் அபாயகரமான முடிவுகளை கருத்தில் கொண்ட ஆசிரியர்கள், பள்ளிக்கு ஹெல்மெட் அணிந்துக்கொண்டு வகுப்பில் பாடங்களை நடத்தியுள்ளனர்.

பள்ளியின் பாதுகாப்பற்ற நிலையை குறித்து ஆசிரியர்கள் கொடுத்த புகார், அம்மாவட்ட கல்வி அதிகாரிக்கு தெரிய வந்துள்ளது. உடனே, அவர் சம்பந்தப்பட்ட பள்ளியை விசாரணை செய்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பரன் மாவட்டத்திலுள்ள ஒரு அரசு அலுவலகம், பழுதடைந்து இருந்ததால், அந்த அலுவலக ஊழியர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்துக்கொண்டு பணிக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க