• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தெரு பூனைகளுக்கு உணவு கொடுத்ததற்காக துப்பாக்கியால் சுட்ட 70 வயது மனிதர்

May 25, 2016 தண்டோரா குழு

அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் நகரில் புறாக்களும் சிக்காகோ நகரில் எலிகளும் அதிகமாக உள்ளது. அதே போல் மியாமி நகரில் பூனைகள் அதிகமாகக் காணப்படுகிறது.

அங்கு உள்ள மக்களுக்குப் பூனைகள் என்றால் அலாதி பிரியம். தங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இணையாக தங்களுடைய செல்லப் பிராணியான பூனை மீது தங்கள் பாசத்தைக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களுடைய செல்ல பிராணிக்கு எவ்வாறு உணவு அளிக்கின்றனரோ அதே போல தனிக் காட்டு ராஜாவாக வெளியில் சுற்றித்திருந்தி கொண்டிருக்கும் பூனைகளுக்கும் உணவு கொடுப்பதை ஒரு பழக்கமாக கொண்டுள்ளனர்.

இதனால் பூனைகளை விரும்பாத அண்டை வீட்டுக்காரர்களுடன் அடிக்கடி பிரச்சனை ஏற்படுவது சகஜமானது தான். மியாமி போன்ற நகரில் சண்டைகளும் வாக்குவாதங்களும் துப்பாக்கிக் குண்டுகள் தான் பதில் அளிக்கும். அதற்கு இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

அறியோல் கிரசியா மற்றும் ஆனா பெரேஸ் தம்பதினர் மியாமி நகரில் கடந்த மூன்று ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்கள் தினமும் தெருவில் இருக்கும் பூனைகளுக்கு உணவு தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அவ்வாறு அவர்கள் பூனைகளுக்கு உணவு தருவதை 70 வயது நிரம்பிய அவர்களுடைய பக்கத்து வீட்டுக்காரரான ஜோஸ் எஸ்ட்ரடா விரும்பவில்லை. இதனால் இரண்டு குடும்பதிருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுக் கொண்டு இருந்தது. கடந்த வாரம் சண்டை அதிகமானதால் ஜோஸ் தன்னுடைய பொறுமையை இழந்த நிலையில் துப்பாக்கியை எடுத்து அறியோல் தம்பதியினரை நோக்கிச் சுட்டார்.

இதைக் கேள்விப்பட்ட காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் நடத்திய விசாரணையில், பூனைகளைக் குறித்து திட்டிக்கொண்டு இருந்த எஸ்ட்ரடா வீட்டின் கதவில் நின்று கொண்டு இருந்த எங்களைத் துப்பாக்கியால் சுட்டார். அவருடைய தாக்குதலில் இருந்து தப்பித்து அவருடைய செய்கையை தன்னுடைய கைப்பேசியில் பதிவு செய்ததாக கிரசியா காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

நல்ல வேலையாக யாருக்கும் எந்த ஆபத்தும் நேரவில்லை. ஆனால் ஜோஸ் துப்பாக்கியால் சுட்டதால் கிரசியாவின் வீட்டின் முன் அரை முழுவதும் துப்பாக்கி குண்டுகளால் சேதம் அடைந்து இருந்தது.

இதையடுத்து எஸ்ட்ரடா தான் துப்பாக்கியால் சுட்டதை ஒத்துக்கொண்டதோடு, படுக்கையின் கீழ் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்துக் காவல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

பின்னர் கொலை செய்ய முயற்சி செய்ததற்காக எஸ்ட்ரடாவை காவல் அதிகாரிகள் கைதி செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோஸ் ஜாமீனில் வெளியே வர 10,000 அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும் என்றும் கிராசியாவின் குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் இந்த வழக்கு முடியும் வரை வீட்டுக் காவலில் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார். பூனைக்கு உணவு வைத்ததற்காகத் துப்பாகியால் சுட்ட விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க