• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரயிலில் சிக்கி கொண்ட இளைஞரை காப்பாற்றிய காவலர்

July 19, 2017 தண்டோரா குழு

ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்க்கும் இடையில் சிக்கி கொண்ட இளைஞரை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படை காவலருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயிலில் ஏற முயன்ற இளைஞர் ஒருவர் திடீரென கால் இடறி கீழே விழுந்தார். அவர் ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்க்கும் இடையில் சிக்கி கொண்டார். அவர் கம்பியை பிடித்தவாறு தொங்கி கொண்டே வந்தார்.

இந்நிலையில் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் சண்முகம் விரைந்து செயல்பட்டு அந்த இளைஞரை ரயிலில் இருந்து கீழே இழுத்து தள்ளினார் இதனால் அந்த இளைஞரின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இளைஞரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதனிடைய அந்த காவலருக்கு பாராட்டு தெரிவித்து ரயில்வே பாதுகாப்பு துறை ஐ.ஜி 5 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கினார்.

மேலும் படிக்க