• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிஐஜி ரூபா பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: பெங்களூரு சிறையில் கைதிகள் போராட்டம்

July 17, 2017 தண்டோரா குழு

டிஐஜி ரூபா பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு சிறையில் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சசிகலாசொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். அவருக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் செய்து கொடுக்க டி.ஜி.பி சத்யநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக சிறைத்துறைடி.ஐ.ஜி ரூபா உயரதிகாரிகளுக்கு ஆவணங்கள் அனுப்பி வைத்தார். இந்த விவவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இன்று டி.ஐ.ஜி ரூபா திடீரென்று பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். பெங்களூரு நகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், ஏடிஜிபி சத்யநாராயணா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரூபா பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து,பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவர்கள் ரூபாவை மீண்டும் சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க