• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு மருத்துவமனையில் ஆணுறை இல்லையா? போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்

July 13, 2017 தண்டோரா குழு

கர்நாடக மாநிலம் அரசு மருத்துவமனையில் ஆணுறை இல்லாததால் இளைஞர் ஒருவர் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் மருத்துவர்கள் தனியார் மருந்தகத்தில் இருந்து ஆணுறை வாங்கி கொடுத்தனர்.

கர்நாடக மாநிலம் சிக்மங்களூரைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் தனது மனைவியைச் சந்திக்க திப்தூர் சென்றுள்ளார். இதற்கிடையில், அவர் வீட்டிற்க்குச் செல்லும் முன்பு அங்கு உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று ஆணுறை கேட்டுள்ளார்.

ஆனால், அங்கு, ஆணுறையும் தானியங்கி இயந்திரமும் இல்லை. இதனால் கணேஷ் கடும் கோபமடைந்தார். இதையடுத்து அங்கு வேலையில் இருந்த மருத்துவர்களையும் பணியாளர்களையும் கேட்டுள்ளார்.

ஆனால், அவர்கள் அணுறை கையிருப்பு இல்லை கூறியுள்ளனர். இதனால், தனக்கு ஆணுறை வேண்டும் என்று கணேஷ் மருத்துவமனை வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

எனினும், மருத்துவர்களும், ஊழியர்களும் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அவர் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டார்.இதனால், வேறு வழியில்லாமல் மருத்துவமனை ஊழியர்கள் தனியார் மருந்தகத்திற்கு சென்று ஆணுறை வாங்கி அவரிடம் கொடுத்தனர்.

இது குறித்து கணேஷ் கூறும்போது,

“எச்ஐவி மற்றும் பல பாலியல் தொடர்புடைய நோய்கள் விரைவில் தொற்றக் கூடியவை, அவற்றில் இருந்து தடுக்கஆணுறை அவசியம்.அரசு மருத்துவமனைகளில் ஆணுறைகள் கட்டாயம் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க