• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாணவனின் விளையாட்டு புத்தியால் நேர்ந்த விபரீதம்.

May 20, 2016 தண்டோரா குழு

ஜப்பானில் 16 வயது மாணவன் ஒசாகா போர்டு ஆப் எஜுகேஷன் துறையின் 444 வலைத் தளத்தையும் ஸ்தம்பிக்கச் செய்த காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளான்.

கல்வி கற்றுக் கொடுக்கும் போது ஆசிரியர்கள் தங்களது அபிப்பிராயங்களை மாணவர்களின் மீது திணிக்க முயல்கின்றனர், ஆனால் எங்களைப் பேச அனுமதிப்பதில்லை என அம்மாணவன் குற்றம் சாட்டியுள்ளான்.

மேலும் இத்தகையை ஆசிரியர்களுக்கு அவர்களுடைய திறமையின்மையை உணர வைக்க வேண்டுமென்று இச்செயலைச் செய்ததாகக் கூறியுள்ளான்.

பள்ளியின் முக்கிய வலைத்தளத்திற்குள் ஊடுருவிப் பல கோடிக்கணக்கான தகவல் செல்லும் வகையில் ஒரு சூழலை உருவாகியதன் மூலம் அபரிமிதமான டேட்டாவை தாக்குப்பிடிக்க முடியாமல் வலைத்தளத்தை செயலிழந்து விடச்செய்துள்ளான்.

அம்மாணவனின் அறிவின்படி அந்தப் பள்ளியில் உள்ள வலைத்தளம் அப்பள்ளியின் தகவல்கள் மட்டுமே அடங்கியது என்பது. ஆனால் அவனது செயலால் மற்ற பள்ளிகளில் உள்ள சிறிய, பெரிய வகுப்புகளின் தகவல்கள் அடங்கிய 444 வலைத்தளங்களும் ஸ்தம்பித்து விட்டன. இதையடுத்து அவன் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் இம்மாணவன் அனானிமஸ் குழுவில் சேர விரும்புவதாகக் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளான்.

அனானிமஸ் மிகப் பெரிய ஹாக்கிங்க் நிறுவனம். கடந்த 2010ம் ஆண்டு ஆபரேஷன் பேபாக் என்ற பெயரில் பேபால் மீது நடத்திய ஊடுருவல் இவ்வமைப்பின் மிக முக்கிய செயல் திட்டமாகும். இந்த செயலுக்குக் காரணம் பேபால், விக்கீலீக்ஸ்க்கு வரும் தகவல்களைத் தடுத்து நிறுத்தியதாகும்.

இம்மாணவன் செய்தது போன்ற சைபர் க்ரைம்க்கு அந்நாட்டின் சட்டப்படி 3 வருடச் சிறை தண்டனையோ அல்லது 5,00,000 என் அபராதமோ செலுத்தவேண்டும்.

மாணவனின் இளைய பிராயத்தைக் கருத்தில் கொண்டும், பின்விளைவுகளை அறியாது செய்த அப்பாவித் தனத்தைக் கணக்கில் கொண்டும் தண்டனை குறைக்கப்படலாம் என்று காவல் துறை கருத்துத் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க