• Download mobile app
14 Oct 2025, TuesdayEdition - 3534
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

க்ரீன் மீன் கறி

July 12, 2017 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்

மீன் துண்டுகள் 1-2 பச்சை மிளகாய் (விதையுடன் அல்லது விதைகள் இல்லாமல்)
1 கூடு பூண்டு
1 டேபிள் ஸ்பூன் இஞ்சி விழுது
1 கைப்பிடியளவு கொத்தமல்லி இலைகள் தண்டுடன் 1 டேபிள் ஸ்பூன்
வெஜிடபிள் ஆயில்
2 நறுக்கிய வெங்காயம்
500 மில்லி தேங்காய் தண்ணீர் ஷெஸ்ட்(லெமன் தோல்) மற்றும் ஒரு எலுமிச்சை ஜூஸ் 1 டேபிள் ஸ்பூன்
பிஷ் சாஸ் 1/2 டேபிள் ஸ்பூன்
பிரவுன் சுகர் 500 கிராம்
தோலை நீக்கிய ஹேக் மீன் (காட் மீனின் ஒரு வகை), சதுர வடிவில் வெட்டி கொள்ளவும்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலைகள் போன்றவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும், வழுவழுவென்று அரைக்க கொஞ்சம் வெஜிடபிள் ஆயிலை தெளித்து தெளித்து அரைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய்யை சூடேற்றி வெங்காயத்தை போட்டு 5 நிமிடங்கள், பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பிறகு அரைத்து வைத்த பேஸ்ட்டையும் கலந்து 2 நிமிடங்கள் வதக்கவும் . தேங்காய் தண்ணீர், லெமன் ஜெஸ்ட்(zest), பிஷ் சாஸ் மற்றும் சுகர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பிறகு இதை அடுப்பில் மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.

இப்பொழுது அதனுடன் வெட்டிய மீன்கள் மற்றும் லெமன் ஜூஸ், உப்பு சேர்த்து மூடி விட வேண்டும். மிதமான தீயில் 3 நிமிடங்கள் மீன் நன்றாக வேகும் வரை வைக்க வேண்டும் . வெதுவெதுப்பான சூட்டில் மீன்களை மட்டும் எடுத்து 4 பெளல்களில் நடுவே பிரித்து வைத்து தேங்காய் கிரேவியை சுற்றி ஊற்றி நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவ வேண்டும். கடைசியாக பச்சை பட்டாணியை சுற்றிலும் வைத்து அலங்கரியுங்கள்.

மேலும் படிக்க