• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காரமான மசாலா மீன் வறுவல்

July 5, 2017 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

மீன் – 250 கிராம் (முள் இல்லாதது)
தேங்காய் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

அரைப்பதற்கு

சின்ன வெங்காயம் – 3
இஞ்சி – 2 இன்ச்
பூண்டு – 6 பற்கள்
கறிவேப்பிலை – சிறிது
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் மீன் துண்டுகளை நீரில் நன்கு கழுவி, அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மசாலா மீன் வறுவல் ரெடி!!!

மேலும் படிக்க