உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்த ஒரு நவீன யுக்தி.
பொம்மைகள் இல்லாது குழந்தைகள் உலகம் இல்லை. பல பொம்மைகள் இருந்தாலும் ஏதோ ஒன்று அல்லது இரண்டு பொம்மைகள் ஒவ்வொரு குழந்தைக்கும் செல்லப் பொம்மையாக இருக்கும். அந்தச் செல்ல பொம்மைகள் உடைந்து விட்டால், அதே பொம்மை திரும்பி வேண்டும் என்று குழந்தைகள் அழும் போது பெற்றோர்களால் அதைச் சமாளிக்கவே முடியாது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல ஜப்பானைச் சேர்ந்த பொம்மை நிறுவனம் ஒன்று வித்தியாசமான முயற்சியில் இறங்கியது.
அந்தப் பொம்மையின் உடைந்த பாகத்தை வேறு ஒரு மீட்க முடியாத பொம்மையின் பாகத்திலிருந்து எடுத்து அதற்கு பொருத்திக் கொடுப்பார்கள். இவ்வாறு செய்யும் போது அந்தக் குழந்தையின் அழுகை நிறுத்தப்பட்டு விடுவதோடு, ஒரு மனிதனுக்கு சில உறுப்புகள் சேதம் அடைந்து போகும் நிலை ஏற்பட்டால் மாற்று உறுப்பு பொறுத்த முடியும் என்றும், அவ்வாறு செய்ய நாம் நமது உடல் உறுப்புகளை தானம் செய்யச் சம்மதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். எனவே உடல் உறுப்பு தானம் எவ்வளவு முக்கியமான ஒன்று எனக் குழந்தைகளுக்கு புரியவைக்கவும் முடியும் என்றும் அந்நிறுவனம் நம்புகிறது.
குழந்தைகள் மத்தியில் உடல் உறுப்பு தானத்தை பற்றி எடுத்துக் கூற அந்நிறுவனம் எடுத்த இந்த முயற்சியைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த முயற்சியில் ஈடுபடும் குழந்தைகள் மட்டுமல்ல அவர்களின் பெற்றோர்களுக்கும் கூடக் கற்று கொள்ள வேண்டியது ஏராளம்.
குழந்தைகள் தங்களின் பிரியமான பொம்மை உடைந்து விட்டது என்று அழும் நிலையும் மாறும், அவர்களைச் சார்ந்த பெரியோர்களும் உடல் உறுப்பு தானம், மற்றும் இரத்த தானம், தலை முடி தானம் பற்றி விழிப்புணர்வும் பெறுவார்கள் என அந்தக் கடையில் பணியாற்றும் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு