• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாக்களிக்க முடியவில்லை சூர்யா வருத்தம்

May 16, 2016 தண்டோரா குழு.

நடிகர் சூர்யா தேர்தலில் அவனைவரும் ஓட்டுப் போட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகத் தேர்தல் ஆணையம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. ஆனால் தற்போது அவராலேயே ஒட்டு போட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

வெளிநாடு சென்ற அவர் தேர்தல் நடைபெறும் நாளன்று சென்னைக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இத்தேர்தலில் அவரால் வாக்களிக்க முடியாது என மன்னிப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், முதல் முறையாக என்னுடைய வாக்குரிமையை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும், அது எனக்கு குற்றவுணர்ச்சியையும் வருத்தத்தையும் அளிப்பதாகக் கூறியுள்ள அவர், இதற்காக அனைவரிடமும் மனப்பூர்வமாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தலுக்கு முன்கூட்டியே வந்து விடலாம் என்று வெளிநாட்டிற்குச் சென்றதாகவும் திட்டமிட்டபடி வர முடியவில்லை என்றும் அனைவரையும் வாக்களிக்கக் கூறிவிட்டு தன்னால் வாக்களிக்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் என் சூழ்நிலையை விளக்கி அஞ்சல் மற்றும் இணையம் மூலம் வாக்களிக்க முடியுமா? என அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன்.

அதற்கான சட்டப்பூர்வமான வழிகள் எதுவும் இல்லை என்பதால் தான் நான் வாக்களிக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் குறிப்பிடத்தக்க வி.ஐ.பிகளில் சூர்யா மட்டுமே வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க