• Download mobile app
03 Dec 2025, WednesdayEdition - 3584
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜித்துடன் மோதப்போகும் விஜய் சேதுபதி

May 14, 2016 தண்டோரா குழு.

வீரம், வேதாளம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜீத்தின் அடுத்த படத்தையும் இயக்குநர் சிவாவே இயக்குகிறார். அந்தப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

அஜித், சிவா கூட்டணி முன்றாவது முறையாக இணையவிருக்கும் அப்படத்தின் படப்பிடிப்பை ஜூன் ஒன்பதாம் தேதி தொடங்கத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் சில காரணங்களால் ஜூலையில் இருந்து படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, படத்தின் நாயகி உட்பட நடிகர், நடிகையருக்கான தேர்வுகள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், இப்படத்தில் நடிகர் கருணாகரன் ஒரு முக்கியவேடத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
தற்போது இப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமிக்கு வழங்கப்பட்டது போல் ஹிரோவுக்கு சமமான ரோல்லாக இருக்கும் என்பதால் விஜய்சேதுபதி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

என்னை அறிந்தால் படத்தில் அஜீத்துக்கு வில்லனாக நடித்து பெரும் வரவேற்பு பெற்ற அருண்விஜயை போல் இந்தப்படத்தில் விஜய்சேதுபதிக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். இது சம்பந்தமான அறிவிப்புகள் விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க