• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும்: ஐ.நா., கணிப்பு

June 22, 2017 தண்டோரா குழு

2024ம் ஆண்டில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் என ஐ.நா., தெரிவித்துள்ளது.

உலக மக்கள் தொகையில் சீன மக்கள் தொகை 141 கோடியாகவும், இந்திய மக்கள் தொகை 134 கோடியாகவும் தற்போது உள்ளது. ஆனால் 2024ம் ஆண்டில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் என ஐ.நா.ஆய்வு நடத்தி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நடந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போது சீன மக்கள் தொகை 141 கோடியாகவும், இந்திய மக்கள் தொகை 134 கோடியாகவும் உள்ளது. இது உலக மக்கள் தொகையில் முறையே 19 மற்றும் 18 சதவீதமாகும்.அடுத்த 7 வருடத்தில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவை இந்தியா முந்தும். 2024ல் இரு நாடுகளின் மக்கள் தொகை தலா 144 கோடியாக இருக்கும்.

இது படிப்படியாக அதிகரித்து இந்திய மக்கள் தொகை 2030ல் 150 கோடியாகவும், 2050ல் 166 கோடியாகவும் இருக்கும். ஆனால்,சீன மக்கள் தொகை 2030 வரை நிலையாகவும் அதன் பின்னர் குறைய துவங்கும் என தெரிவித்துள்ளது.

எனினும், இந்திய மக்கள் தொகை 2050க்கு பிறகே குறைய துவங்கும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் உலகளவில் மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க