• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வீடு தேடி வரும் டீசல்! இந்தியாவில் முதல் முறையாக துவக்கம்

June 22, 2017 தண்டோரா குழு

“மை பெட்ரோல் பம்ப்” என்ற தனியார் நிறுவனம் பெங்களூருவில் இந்தியாவின் முதல் ஹோம் டெலிவரி டீசல் விற்பனையை துவங்கியுள்ளது.

“மை பெட்ரோல் பம்ப்” என்ற தனியார் நிறுவனம் டீசல் விற்பனையை ஒரு தொடக்கமாக ஒரு வருடத்துக்கு வீடு தேடி டீசல் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் சார்பில் ஆஷிஷ் குப்தா கூறுகையில்,

” பெட்ரோல் என்பது இருசக்கர வாகனம் மற்றும் கார்களுக்கு மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் டீசல் என்பது கனரக வாகனங்கள் தொழில் நிறுவனங்கள் தொடங்கி விவசாயம் வரை தேவைப்படும் ஒன்றாக உள்ளது.

வருடத்துக்கு பெட்ரோலின் தேவை 22 மில்லியன் மெட்ரிக் டன் மட்டும் டான் தான் பயன்படுகிறது ஆனால் டீசலின் தேவை மட்டும் சுமார் 77 மில்லியன் மெட்ரிக் டன் பயன்படுகிறது என்றார். மேலும், எதிர்காலத்தில் பெட்ரோலுக்கும் ஹோம் டெலிவரி அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது ஹோம் டெலிவரி டீசலுக்கான முன்பதிவை தொலைபேசி அல்லது செயலி மூலமாகவோ செய்யலாம். இதற்காக 100 லிட்டர் வரைக்கும் ரூ.99 டெலிவரி சார்ஜாக வசூலிக்கப்படும் என்றும் 100 லிட்டருக்கு மேல் லிட்டருக்கு ஒரு ரூபாய் வைத்து வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பெட்ரோல் நிலையங்களில் நிற்கும் நீண்ட வரிசைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க