வருங்கால முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று நடிகர் விஜய்க்கு பா.ஜ.க வைச் சேர்ந்தவரும் நடிகருமான எஸ்.வி. சேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய், இன்று தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது 61-வது படத்தின் பெயர் மற்றும் பரஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதில், விஜய்யின் பெயரை ‘தளபதி விஜய்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இளைய தளபதி விஜய்யிலிருந்து’ ‘தளபதி விஜய்க்கு’ மாற, இதை விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கான அறிகுறியாகவே அவரது தொண்டர்கள் பார்க்கின்றனர். சமிபத்தில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சயில் விவசாயிகளுக்கு ஆதரவாக விஜய் பேசினார்.
இந்நிலையில், பா.ஜ.கவைச் சேர்ந்தவரும்,நடிகருமான எஸ்.வி. சேகர் வருங்கால முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் ட்விட்டரில் கூறுகையில்,
விஜய் தனது கடின உழைப்பால் படிப்படியாக முன்னுக்கு வந்தவர். விஜய்க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும், ஆசிர்வாதங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களுடைய கஷ்டங்களை தெரிந்தவர் தான் அரசியலுக்கு வர வேண்டும். அந்த வகையில் மக்களின் கஷ்டங்களை அறிந்தவர் விஜய் தான்.எனவே விஜய் அரசியலுக்கு வர வேண்டிய சூழல் உள்ளது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு