• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

யார் அந்த ரகுராம் நாயக்

May 13, 2016 தண்டோரா குழு.

ரகுராம் நாயக் என்பவரின் 85 வயதான மனைவி மண்டோஹரியை 67 வருடங்களுக்குப் பிறகு ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் 5 லட்சம் ரூபாய் பரிசாகக் கொடுத்து கௌரவித்துள்ளார்.

யாரிந்த ரகுராம் நாயக்?

நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியை பிர்லா ஹவுஸ்ல் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்ஸேயைத் துரத்திப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தவர் ரகுராம் நாயக். அதன் பிறகு கோட்ஸேக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது நாம் அறிந்ததே.

ரகுராம் நாயக்கின் வீரத்தைப் பாராட்டி அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திரப் பிரசாத் 500 ரூபாயை பரிசாக வழங்கினார்.

ரகுராம் நாயக் ஒடிசாவில் கேந்திரபாரா மாவட்டத்திலுள்ள ஜாகுலைபாடா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். பிர்லா ஹவுஸ்ல் தோட்டக்காரராக வேலைபார்த்தவர்.

அவர் கடந்த 1983ம் ஆண்டு மரணமடைந்தார். காவல்துறையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த அவரது மகன் பிட்யாதரும் 2002ம் ஆண்டு ஒரு விபத்தில் காலமானார்.

கணவனையும், மகனையும் இழந்த நாயக்கின் மனைவி தனது மருமகள் மற்றும் இரு பேத்திகளுடனும் வசித்து வந்தார்.

எந்தவித ஆதரவுமின்றி இவர்கள், வறுமையில் வாடுவதாக ஜாகுலைபாடாவாசிகள் மூலம் அரசிற்கு தெரிய வந்தது.

அதன் பயனாக முதன் மந்திரி நவீன் பட்நாயக், மற்றும் மாவட்டக் கலெக்டர் முதலானோர் நாயக்கின் 85 வயது மனைவி மண்டோஹரியை சால்வை அணிவித்து கௌரவித்ததுடன் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினர்.

மக்களாலும், சரித்திரத்தாலும் இவர் மறக்கப்பட்டாலும் இவரது கிராம மக்கள் இவரை போற்றுகின்றனர்.

மோட்டார் தொழில் புரியும் டைம்லர் செரிஸ்லர் எனும் ஜெர்மானியரின் துணையுடன் ரகுராம் நாயக்கிற்கு இவரது கிராம மக்கள் ஒரு நினைவுத் தூணை அமைத்துள்ளனர்.

எந்த சரித்திரப் புத்தகத்திலும், எந்த இடத்திலும் இவரது பெயர் இடம் பெறவில்லை. இது அவருக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநியாயம் என்று பள்ளி ஆசிரியரான மஹேஸ்வர் தாஸ் கூறியுள்ளார்.

அதே போல் கிராம மக்களும் அவரது குடும்பத்தாரும், ரகுராம் நாயக்கிற்கு தகுந்த அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

மகாத்மா காந்தியின் அந்தரங்கச் செயலாளரான பியாரிலால் என்பவர் எழுதிய மஹாத்மா காந்தி த லாஸ்ட் பேஸ் (Mahatma Gandhi The last phase) என்ற புத்தகத்தில் ரகுராம் நாயக்கின் செயல்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க