• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறப்பாய் தொடங்கியது உலக புகழ்பெற்ற நாய் இறைச்சி திருவிழா!

June 21, 2017 தண்டோரா குழு

சீனாவில் உலக புகழ்பெற்ற நாய் இறைச்சி திருவிழா தடை வதந்திகளுக்கு இடையே சிறப்பாய் துவங்கியது.

உலக புகழ்பெற்ற நாய் இறைச்சி திருவிழா சீனாவின் யூலின் பகுதியில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நாய் இறைச்சி விழாக்காக நாய்கள் ஆயிரக்கணக்கில் கொடூரமான கொல்லப்படுவதாகவும் ருசியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் நாய்கள் அடித்து, உயிருடன் சூப்பாக கொதிக்கவிடப்படுவதாகவும் விலங்கு நல பாதுகாப்பு அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் இத்திருவிழாற்கு கடந்த ஆண்டே கடும் எதிப்புகள் கிளம்பியது.

எனினும், இந்தாண்டு முதல் நாய் இறைச்சிக்கு சீனாவில் தடை விதிக்கப்படலாம் என வதந்திகள் பரவின. இதனால் திருவிழா நடக்குமா என்ற குழப்பத்தில் மக்கள் இருந்தனர். ஆனால், பல்வேறு வதந்திகளுக்கு இடையிலும் நாய் இறைச்சி திருவிழா வழக்கமான உற்சாகத்தோடு இன்று துவங்கியது.

நாய் இறைச்சி சூப், ஃபிரை உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகள் விழாவில் பரிமாறப்படுகின்றன. இதை உண்டு ரசிப்பதற்காக ஏராளமானோர் சீனாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் விழா நடைபெறும் இடத்திற்கு குவிந்துள்ளனர்.

சீனாவில் நாய் இறைச்சி சாப்பிடுவதற்கு சட்டப்பூர்வமான தடை ஏதும் இல்லை. ஆனால் பல விலங்கு நல அமைப்புகள் நாய் இறைச்சிக்கு தடைக் கோரி தொடர்ந்து போராடி வருகின்றன. இதற்காக ஆண்டு தோறும் சீனாவில் 1 முதல் 2 கோடி நாய்கள் இறைச்சிக்காக கொல்லப்படுவதாக அந்த அமைப்புகள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க