• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய கொடி தலைகீழாக பறக்கவிட்ட ஓட்டுனர் பணியிடை நீக்கம்

June 21, 2017 தண்டோரா குழு

புதுச்சேரி முதல்வரின் காரில் உள்ள தேசிய கொடி தலைகீழாக பறக்கவிட்ட ஓட்டுநரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இது குறித்து புதுச்சேரி மூத்த அதிகாரி கூறுகையில்,

“புதுச்சேரியின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக மூன்று நாள் தங்கி, மத்திய அமைச்சர்கள் சிலரை சந்தித்துவிட்டு புதுதில்லி இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து புதுச்சேரி வர திட்டமிட்டிருந்தார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து புதுச்சேரி செல்லும் முன், புதுச்சேரி முதலமைச்சர் வி. நாராயணசாமி தனது காரில் பொருத்தப்பட்டிருந்த தேசிய கொடி தலைகீழாக பறப்பதைப் பார்த்துள்ளார்.அப்போது, காரின் முன்பு வைக்கப்பட்டு இருந்த தேசியக் கொடி தலைகீழாகப் பறப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரே காரில் இருந்து இறங்கி தேசியக் கொடியை சரியாக வைத்தார்.

இதனால் கோபம் அடைந்த அவர், புதுச்சேரி வந்ததும் முதல் வேலையாக தனது கார் ஓட்டுநர் இப்ராகிம் என்பவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்துவிட்டார்” என்று கூறினார்.

மேலும் படிக்க