• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

UPSC தேர்வு மையங்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்

June 19, 2017 தண்டோரா குழு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணிக்கான முதல்நிலை தேர்வு கோயம்பத்தூர் மாவட்டத்தில் 22 மையங்களில் நேற்று (19.06.2017) நடைபெற்றது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, புனித மைக்கல் மேல்நிலைப்பள்ளி, புனித காணிக்கை அன்னை மேல்நிலைப்பள்ளி, ஆகிய மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தேர்வு மையமான சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்றது.தேர்வு நடைபெற்ற அனைத்து தேர்வு மையங்களிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் கூறுகையில்,

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப்பணி முதனிலை போட்டித் தேர்வுகள் 22 மையங்களில் நடைபெற்றது. தேர்வெழுத விண்ணப்பித்திருந்த 8748 நபர்களில் 3943 நபர்கள் தேர்வெழுதினர், 4805 நபர்கள் தேர்வெழுதவில்லை.

இத்தேர்வினை கண்கானிக்க மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கோவை மாவட்ட UPSC தேர்வு கண்காணிப்பு அலுவலர் தமிழக மின் ஆளுமைத்திட்ட ஆணையர் ஆனந்தராஜ் விஷ்ணுபாட்டில் , அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

UPSC தேர்வு கண்காணிப்பு அலுவலர் அவர்களும் அனைத்து மையங்களிலும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், துணை ஆட்சியர் 7 மொபைல் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் ஒவ்வொருமையத்திற்கும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 43 உதவி மேற்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டு சிறப்பான முறையில் பணியாற்றினர். என்று கூறினார்.

மேலும் படிக்க