• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீனாவைக் கலக்கும் 81 வயது பேஷன் மாடல்!

June 19, 2017 தண்டோரா குழு

பொதுவாக பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால், குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதை மக்கள் விரும்புவர். ஆனால், சீனாவை சேர்ந்த 81 முதியவர், பல சாதனைகளை புரிந்து மக்களுக்கு வியப்பை தந்து வருகிறார்.

சீனாவில் வசிக்கும் 81 வயது வாங் டேஷன், விளம்பரங்கள், ஃபேஷன் ஷோக்கள், திரைப்படங்கள் என்று சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். சீனாவின் ‘ஹாட்டஸ்ட் கிரான்ட்பா’ என்று அழைக்கப்படும் இவர், முதியவர்களின் பார்வையையும் மாற்றியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாதாரண வாழ்கையை வாழ்ந்து வந்தார். ஆனால், அதிர்ஷ்டவசமாக, பெய்ஜிங்கில் நடந்த பேஷன் ஷோவில் மாடல்கள் சூழ வெறும் மார்புடனும், வெண் தாடி மற்றும் நீண்ட முடியுடன் நடந்து வரும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதையடுத்து, ஒரே இரவில் பிரபலமானார்.

81 வயதுடைய முதியவர் எப்படி இவ்வாளவு தன்னை இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார் என்று மக்களால் நம்பமுடியவில்லை. இவர் என்ன சாப்பிடுகிறார்? தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக எப்படி வைத்திருக்கிறார்? இவர் திருமணம் ஆகியவரா? என்று மக்கள் அறிந்துக்கொள்ள விரும்பினர்.

“முதல்முறை சட்டையின்றி ஃபேஷன் ஷோவில் நடந்தபோது ஆபாசமாக வலம் வந்த குற்றத்துக்காக கைது செய்யப்படுவோம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அதற்கு நேர்மாறாக, விளம்பரங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்களில் வாய்ப்புகள் வந்து குவிந்துவிட்டன.

ஆன்லைன் மூலம் பரவும் ஊக்குவிக்கும் காணொளிகளில் அவர் நடித்தார். தொடர்ந்து மாடலிங் செய்தார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சீன திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். இவர் சீனாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் பிரபலமானார்.

புகழும், பணமும் பெருகிவிட்டது ஆனால் என் வாழ்க்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதேபோல் தான் இப்போது உள்ளது. ஒரு கிண்ணம் சோறும், கொஞ்சம் டோஃபுவும் தான் என் உணவு. இயற்கை நம் வயதைத் தீர்மானிக்கிறது. நீங்கள்தான் மனநிலையைத் தீர்மானிக்கிறீர்கள்.

இறப்பை தவிர்க்க முடியாது. இறப்பிற்கு பிறகு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. நான் வாழும்போது கலைக்காக வாழ்கிறேன். நான் இறந்த பிறகு, என்னுடைய உடல் மருத்துவ பண்பாட்டுக்கு கொடுக்கப்படும்” என்று வாங் தெரிவித்தார்.

மேலும் படிக்க