• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியா சுஷ்மா மறுப்பு

June 17, 2017 தண்டோரா குழு

குடியரசுத்தலைவர் தேர்தலில் தான் போட்டியிடுவதாக வெளியான செய்தி வெறும் வதந்தி என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விளக்கமளித்துள்ளார்.

இந்திய குடியரசுத்தலைவர் தேர்தல் ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு ஜூலை 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

இதனால், ஆளும் பாஜக அரசும் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான தங்கள் வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன் மக்கள் மத்தியில்பல தலைவர்களின் பெயர்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது.

அதில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் பெயரும் பேசபட்டது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த சுஷ்மா சுவராஜ் , “ நான் குடியசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக வெளிவந்த தகவல் உண்மையில்லை. வெளியுறவு துறை அமைச்சராக தொடர்ந்து பணியாற்றுவேன் என கூறினார்.

மேலும் படிக்க