• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாடோடி வீடுகள்

May 12, 2016 தண்டோரா குழு

முற்காலங்களில் மக்கள் குதிரை வண்டி, மாட்டு வண்டி, குதிரைச் சவாரி, ஒட்டகங்கள் மீது சவாரி போன்றவற்றைப் பயன்படுத்தி ஓர் இடத்தில் இருந்து வேறு இடத்திற்குப் பயணம் செய்து வந்தனர். பிறகு அரசர்கள் அரசாட்சி செய்த போது தேர் மற்றும் பல்லாக்குகளைப் பயன்படுத்தினர். காலம் செல்ல செல்ல மக்கள் நவீன பயண ஊர்திகளைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

ஐக்கிய ராஜ்யத்தின் ஒரு பகுதியான அயர்லாந்து நாட்டின் ஒரு வித்தியாசமான பயண முறையைக் கையாண்டு வந்தனர். அந்த நாட்டின் நாடோடி இனத்தைச் சேர்ந்தவர்கள் ஓர் இடம் விட்டு வேறு இடம் செல்ல தங்களுடைய உடைமைகளை ஒரு வீடு போன்று அமைத்து அதைக் குதிரையோடு சேர்த்து அதில் பயணம் செய்து வந்தனர்.

அதையே “ரோமனி கேரவன்” என்று அழைப்பதுண்டு. இந்தப் பழக்கம் சுமார் 1840களில் வாழ்ந்த
நாடோடிகள் பயன்படுத்தி வந்தனர். இந்த நாடோடிகள் வீட்டில் அப்படி என்ன இருக்கிறது என்று நம்மில் பலர் கேட்கலாம்.

சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள், தேநீர் அருந்துவதற்கு வேண்டிய கோப்பைகள், முகம் கழுவ மற்றும் பாத்திரங்கள் கழுவத் தனியான இடம் ஆகியவை அனைத்தும் அமைந்துள்ளது.

விருந்தினர்களை அமரச் செய்து அவர்களுக்கு உபசரிக்க மேஜை மற்றும் இருக்கையும் இருந்துள்ளது. மேலும், உள்ளே ஒளியைத் தர விளக்குகள் பொருத்த இட வசதி செய்யப்பட்டு இருந்தது. ஒரு வீட்டிற்கு என்ன என்ன வசதிகள் தேவையோ அவை அனைத்தையும் இந்த நாடோடி வீட்டிலும் காணலாம்.

மேலும், குதிரைகளால் இழுக்கப்படும் இந்த நாடோடி வீடுகள் சுமார் 5 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும், 750 கிலோ எடையும் கொண்டதாக அமைந்திருந்தது. அதோடு அந்த காலத்தில் வசதிக்கு தக்கவாறும் அந்த அமைப்பை மாற்றி அமைத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தற்போது இந்த நாடோடி வாழ்க்கை மீது மக்களுக்கு அதிக நட்டம் இல்லாததால் அதை அதிகமாக உபயோகிப்பது இல்லை.

இனப்பெருக்கம் மற்றும் வரைவு குதிரைகள் பயிற்சிக்காக இந்தக் குதிரைகளை பயன்படுத்தவே மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது மிகப் பிரபலமானவர்களும், சினிமா நட்சத்திரங்களும் பயன்படுத்தும் கேரவன் எனப்படும் அனைத்து வசதிகளும் கொண்ட வேன் தயாரிக்க இந்த வகை வண்டிகளும் ஒரு காரணம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. சுருக்கமாகச் சொல்லப்போனால் அவை அந்த காலத்து சொகுசு கேரவன்கள்.

மேலும் படிக்க