• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டபேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜுவை தெர்மாகோல் என்று கலாய்த்த திமுக எம்.எல்.ஏகள்

June 14, 2017 தண்டோரா குழு

சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும் போது தெர்மாகோல், தெர்மாகோல் என்று திமுகவினர் கோஷம் எழுப்பியதால் பெரும் சிரிப்பலை ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, உறுப்பினர்கள் அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர்.இதனைத்தொடர்ந்து கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது எம்.எல்.ஏ செங்குட்டுவன் கேள்விக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது திமுக உறுப்பினர்கள் தெர்மாகோல்… தெர்மாகோல்… என்று கூச்சலிட்டனர்.இதனால், சிறிது நேரம் சட்டபேரவையில் சிரிப்பலைஏற்பட்டது.

மேலும் படிக்க