• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சேலம் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கழிவறைகள் திறப்பு

June 14, 2017 தண்டோரா குழு

சேலம் ரயில்நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகளுடன் கூடிய கழிவறைகளை சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சந்திரபால் திறந்து வைத்தார்.

ரயில்நிலையங்களை பயணிகளுக்கு குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மேம்படுத்த தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைளின் ஒரு பகுதியாக, இன்று சேலம் ரயில்நிலையத்தின் 3-4 நடைமேடைகளில் சீர் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதியுடன் கூடிய கழிப்பறைகளை சந்திரபால் இன்று திறந்து வைத்தார்.

சேலத்தில் உள்ள ’28 ரவுண்ட் டேபிள் இந்தியா’ என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்புக் கழிப்பறை மாற்றுத் திறனாளிகள் நேரடியாக தங்களது வீல் சேர்களில் அமர்ந்து கொண்டு உள்ளே செல்ல வசதியாக இரு புறங்களிலும் கைப்பிடிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சந்திரபால் பேசுகையில்

“தெற்கு ரயில்வேயுடன் கை கோர்த்து பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில்நிலையங்களில் இத்தகைய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள முன்வந்ததற்கு ரவுண்ட் டேபிள் நிறுவனத்திற்கு நன்றி.” என்றார்.

ரவுண்ட் டேபிள் அமைப்பின் உறுப்பினர் சுப்பு பேசுகையில்,

சேலம் ரயில் நிலையத்தில் கழிவறைகள் 6.5 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு இருப்பதாகவும், இந்திய ரயில்வேயுடன் இணைந்து இது போன்ற மேலும் பல மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜுவின் பேசுகையில்,

ரயில் பயணிகள் ரயில் நிலையங்களை தூய்மையாக பராமரிக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க