• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலையில் சுற்றி திரியும் குதிரைகள் ; விபத்தில் சிக்கி படுகாயம் அடையும் அவல நிலை

June 13, 2017 தண்டோரா குழு

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றி திரியும் குதிரைகள் விபத்தில் சிக்கி படுகாயம் அடையும் அவல நிலை, நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை.

கோவை மேட்டுப்பாளையம் சாலை அருகே வெள்ளக்கினறு பகுதியில் குதிரைகள் சாலையோரங்களில் சுற்று திரிவது வழக்கமாக உள்ளது. அவ்வாறு சுற்றி திரியும் குதிரைகள் சில சமயங்களில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றன.

இதே போன்ற சம்பவம் இன்று வெள்ளக்கினறு பகுதியில் நிகிழ்ந்துள்ளது. குதிரை ஒன்று இரவு நேரத்தில் சாலையோரம் உள்ள குழியில் விழுந்து பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியுள்ளது. அதனை அருகில் உள்ள மக்கள் மீட்டு கால்நடை தனியார் முதல் உதவி மையம் ஒன்றின் உதவியுடன் அதற்கு சிகிச்சை அளித்தனர்.

இது குறித்து சண்முகசுந்தரம் என்பவர் கூறுகையில்,

” குதிரைகள் சாலைகளில் சுற்றி திரிந்து வாகன ஓட்டிகளை தொந்தரவு செய்கின்றன. குதிரைகளின் உரிமையாளர்கள் யார் என்று தெரிவதில்லை. குதிரைகள் விபத்தில் சிக்கிவிட்டால் அதன் உரிமையாளர் வந்து அந்த குதிரைக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடும் செய்வதில்லை. எனவே காவல்துறையினர் குதிரை உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

பகல் முழுவதும் குதிரைகளை வைத்து வேலை வாங்கிவிட்டு இரவு நேரங்களில் அவைகளை பாராமரிக்காமல் உரிமையாளர்கள் சாலைகளில் சுற்றி திரிய விட்டு விடுகிறார்கள். இதன் காரணமாகவே குதிரைகள் கேட்பாரற்று சுற்றுகின்றன, விபத்தில் சிக்கி உயிரிழப்பும் ஏற்படுகிறது என இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும் குதிரைகள் சாலைகளில் சுற்றி திரிவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குதிரைகள் வாகனங்களுக்கு இடையே அங்கும் இங்கும் செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர்.

கால்நடை ஆர்வலர் ஒருவர் கூறுகையில்

” உரிமையாளர் இல்லாமல் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பாராமரிக்க மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும். உரிமையாளர்கள் இருக்கும் பச்சத்தில் அவர்கள் மீது அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

இது குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யாபாரதி கூறுகையில்,

” குதிரைகள் சாலைகளில் சுற்றி திரிவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் ” என்றார்.

மேலும் படிக்க