நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததுள்ளது. இதனால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் சமீபத்தில் நடந்தது. இந்த தேர்வினை இந்தி அல்லது ஆங்கில மொழியில் 10.5 லட்சம் மாணவர்களும், தமிழ் உள்ளிட்ட 8 பிராந்திய மொழியில் 1.5 லட்சம் மாணவர்களும் எழுதினர்.
எனினும், தமிழ் மொழி வினாத்தாளிலும், ஆங்கில மொழி வினாத்தாளிலும் மாறுபட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தமிழக மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
இதற்கிடையில், தமிழ் மொழி வினாத்தாள் கடினமாக இருந்ததால், ஒரே மாதிரியான வினாத்தாளுடன் தேர்வு நடத்தப்பட வேண்டுமெனக் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட கடந்த மாதம் 24ம் தேதி இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்திய மருத்துவ கவுன்சில், சிபிஎஸ்இ இயக்குனர், மத்திய சுகாதார அமைச்சகம் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தர விடப்பட்டுள்ளது.
அதைப்போல் மாநில நீதிமன்றங்கள் நீட் தேர்வு தொடர்பான வழக்கை விசாரிக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு