• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஷட்டில் பஸ்சில் தூங்கிய பயணி;விமானத்தை தவறவிட்டார்

June 10, 2017 தண்டோரா குழு

விமானம் புறப்படும் முன், கேட்டில் இருந்து விமானத்துக்கு செல்லும் ஷட்டில் பஸ்சில் பயணி ஒருவர் தூங்கியதால் விமானத்தை தவற விட்டுள்ளார்.

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமானநிலையத்தில், பெங்களூர் செல்லும் இண்டிகோ விமானம் 6E799 விமானத்தில் பயணம் செய்ய அந்த பயணி டிக்கெட் வாங்கியுள்ளார். பயண நாளின்போது, உள்நாட்டு முனையத்தில் பரிசோதனைகளை முடித்து போர்டிங் பாஸுடன் கேட்டுக்கு சென்றார். விமான நிலையத்திலிருந்து விமானம் நிற்க வைக்கப்படிருக்கும் இடம் வரை செல்லும் ஷட்டில் பஸ்சில் ஏறியுள்ளார்.

இங்கு அனைத்து பயணிகளும் வந்துவிட்டார்களா என்று சோதனை செய்யப்படுவது உண்டு.அதன் படி அவருடைய டிக்கெட்டும் பரிசோதிக்கப்பட்டு ஏற்றப்பட்டார்.ஆனால், அவர் பஸ்சில் ஏறியவுடன் அவர் தூங்கிவிட்டார்.பஸ்ஸில் பயணித்த மற்ற பயணிகள் விமானத்தில் ஏறிவிட்டனர் விமானமும் பயணமானது. ஆனால், பஸ்ஸில் தூங்கிய நபர் விமானத்தை தவறவிட்டுள்ளார்.

பஸ் பராமரிப்பு இடத்தில் நிறுத்திவைக்கபட்டிருந்த பஸ்ஸிலிருந்து சுமார் 6 மணிநேரத்திற்கு பிறகு, அவரை விமான ஊழியர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து, விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் Central Industrial Security Force (CISF) துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

“விமான டெர்மினலை விட்டு புறப்பட்ட பயணி விமானத்தில் இல்லை என்று இண்டிகோ விமான அதிகாரிகள் கண்டுபிடிக்கவில்லை. அவரை விட்டுவிட்டு விமானம் கிளம்பியுள்ளது. இவ்வாறு தவறு நடக்காமல் இருக்கத்தான், பயணிகளுக்கு தரப்படும் போர்டிங் அட்டையை விமான டெர்மினலில் ஸ்கேன் செய்யப்படுகிறது. பயணிகள் விமானத்தை அடைந்தது, விமான வாயிலில் அந்த போர்டிங் அட்டையை கிழித்துவிடுவர். இதன் மூலம் விமானத்திற்கு வரவேண்டிய பயணிகள் வந்துவிட்டனர் என்று தெளிவாக தெரிந்து விடும். பயணிகள் அனைவரும் விமானத்தில் இருக்கின்றனரா என்று சரிபார்க்க வேண்டும்” என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை. மேலும், இது போன்ற தவறை மீண்டும் செய்யாமல் இருக்க, அனைத்து ஏர்லைன்ஸ் நிறுவனமும் கவனமாக இருக்க வேண்டும் என்று “CISF” துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் படிக்க