• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பத்திரப்பதிவுக்கான வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைப்பு

June 9, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் பத்திரப்பதிவுக்கான வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பத்திரப்பதிவு கட்டணம் ஒரு சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதல்வரின் தனி செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சரவை கூட்டம் சுமார் 30 நிமிடம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் மட்டும் பங்கேற்கவில்லை. அவர் விமானம் தாமதமாக சென்னை வந்ததால் அமைச்சரவை கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

அமைச்சரவை கூட்டத்திற்கு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

” பதிவுத்துறை தலைவர் தலைமையிலான மதிப்பீட்டு குழு பரிந்துரை படி, தற்போது மாநிலத்தில் நடைமுறையில் உள்ள சந்தை மதிப்பு வழிகாட்டியை இன்று முதல் 33 சதவீதம் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தை மதிப்பு வழிகாட்டியினை குறைப்பதனால் அரசுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பினை ஈடுசெய்ய விற்பனை, பரிமாற்றம், தானம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அல்லாத நபர்களுக்காக எழுதிக் கொடுக்கப்படும் ஏற்பாடு போன்ற ஆவணங்களுக்கான பதிவு கட்டணத்தினை 4 சதவீதமாக நிர்ணயிக்கவும், இப்பதிவு கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க