• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாட்டூவால் ஏற்பட்ட மரணம்

June 9, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் டெக்சாசை சேர்ந்த ஒருவர், டாட்டூ குத்தியதால் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகணத்தை சேர்ந்த ஒருவர், வட அமெரிக்கா அருகிலுள்ள Gulf of Mexico கடலில் நீந்த திட்டமிட்டிருந்தார். அங்கு செல்வதற்கு முன், தனது காலில் “இயேசு என் வாழ்க்கை” என்று டாட்டூ குத்தியுள்ளார்.

ஆனால், strong>Gulf of Mexico சென்று வந்த பிறகு, அவருடைய காலின் பின் பகுதியில் அதிக வலி ஏறப்பட்டதால், டெக்சாஸ் மாநிலத்தின் டாலஸ் நகரிலுள்ள பார்க்லேந்து மெமோரியல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். மருத்துவர்கள் அவருக்கு பரிசோதனை நடத்தினர்.

பரிசோதனையின் முடிவில், அவருடைய உடலில் “Vibrio Vulnificus” என்னும் மனித சதையை உண்ணும் பாக்டீரியா இருப்பது தெரிய வந்ததுள்ளது. உடனே அவருக்கு உயிர்க்காக்கும் கருவி மூலம் சிகிச்சை மருத்துவர்கள் அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Gulf of Mexico கடல்பகுதியில் “Vibrio Vulnificus” பாக்டீரியா அதிகமாக காணப்படுகிறது. கோடை காலத்தில் அதனால் உண்டாகும் தொற்று நோய் அதிகமாக இருக்கிறது” என்று பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிக்கை கூறுகிறது.

நோய் கட்டுப்பாடு மற்றும் நோய் தடுப்புக்கான அமெரிக்க மையம் வெளியிட்ட அறிக்கையில்,

“அமெரிக்காவில் 80,000 நோய்களையும் ஒவ்வொரு ஆண்டும் 1௦௦ பேர் இறப்பதற்கும் “Vibrio Vulnificus” பாக்டீரியா முக்கிய காரணமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க