• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாய் பல்லவி நடிப்பில் ’கரு’

June 9, 2017 tamilsamayam.com

சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் ‘கரு’ படத்தின் முதல் பார்வை வெளியானது.

மலையாளத்தில் வெளியான ’பிரேமம்’ படத்தில் நடித்து, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சாய் பல்லவி. இதைத் தொடர்ந்து ’ஃபிடா’ என்ற தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்த சாய் பல்லவி, தமிழ் திரைப்படத்தில் நடிக்காதது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமளித்தது.

இந்நிலையில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளார். அதற்கு ‘கரு’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. அதனை நடிகர் பிரபுதேவா தனது டிவிட்டர் சமூகவலைத்தளம் மூலம் வெளியிட்டார்.

சாய் பல்லவி நடிக்கும் முதல் தமிழ் படம் என்பதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ’கரு’ படத்தில் தெலுங்கு நடிகர் நாகா சவுர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க