• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடிமைப்பணிக்கான தேர்வு எழுதுபவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – கோவை மாவட்ட ஆட்சியர்

June 6, 2017 தண்டோரா குழு

மத்திய அரசின் குடிமைப்பணிக்கான முதல்நிலை போட்டித் தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்கள் எதிர்காலத்தில் அரசு தேர்வுகள் எழுத தடை செய்யப்படுவது மட்டுமின்றி அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் கூறியுள்ளார்.

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 18.06.2017 அன்று முற்பகல்; (9.30 முதல் 11.30 வரை) மற்றும் பிற்பகல் (2.30 முதல் 4.30 வரை) என இரு வேளைகளாக குடிமைப்பணி முதல்நிலை போட்டித் தேர்வுகள் நடத்தப்படவுள்ளது.

தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்

“கோவை மாவட்டத்தில் தேர்வு நடைபெறும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்துக்கொள்ள மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கண்காணிப்பு அலுவலர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இத்தேர்விற்காக துணை ஆட்சியர் நிலையில் மொபைல் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு மையத்திற்கும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இத்தேர்வில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு தேர்வு மையத்திற்கு செல்ல ஏதுவாக தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் உக்கடம், காந்திபுரம் மற்றும் சிங்காநல்லூர் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் போதுமான தளவாடங்கள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் பாதுகாப்பின் பொருட்டு போதுமான காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுப்பட்டால் அவர்கள் எதிர்காலத்தில் அரசு தேர்வுகள் எழுத தடை செய்யப்படுவது மட்டுமின்றி அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், காவல் துணை ஆணையர் துரை, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்(பொது) சிதம்பரம் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க