மாட்டிறைச்சி விவகாரத்தில் கோவையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பினர் 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்.மாட்டிறைச்சி மீதான தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையை அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பினர் முற்றுகையிட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது,
சென்னையில் இனப்படுகொலைக்கு எதிராக நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமுருகன், இளமாறன், டைசன், அருண் ஆகியோர் கைது செய்யப்பட்டது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆகவே, அவர்கள் மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். மாட்டிறைச்சி மீதான தடையை நீக்க வேண்டும் என்றனர்.
இந்த முற்றுகை போராட்டத்தில் ஆதித்தமிழர் கட்சி மாநிலத் தலைவர் வெண்மணி உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைதுசெய்தனர். இந்தப் போராட்டம் காரணமாக அதிமுக தலைமை அலுவலகம் முன்பாக சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது