• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தினகரனிடம் படையெடுக்கும் எம்எல்ஏக்கள் எடப்பாடி ஆட்சி கவிழுமா?

June 6, 2017 தண்டோரா குழு

அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு தற்போது வரை 25 எம்.எல்.ஏ க்கள் தங்களது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். இதனால் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும் அபாயத்தில் உள்ளது.

அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவிதினகரன் சிறையில் இருந்து வெளியே வந்த உடன், எடப்பாடி தரப்பு ஆட்டம் கண்டது.இதையடுத்து அமைச்சர்களின் அறையில் நேற்று அதிரடியாக எடப்பாடியின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன.டிடிவி தினகரன் சிறையில் இருந்தபோது அவருக்கு வெறும் 3 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு அளித்தனர். தற்போது அவர் வெளியே வந்தபோது, ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது.

இந்நிலையில் இன்று முன்னாள் அமைச்சர்களான தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பன், ராஜன் செல்லப்பா உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர்.இதுவரை மொத்தம் 25எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு அளித்துள்ளனர்.

இவர்கள் நினைத்தால் எந்த நிமிடத்திலும் ஆட்சியை கவிழ்த்து விட முடியும். இதனால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.ஏற்கனவே அதிமுக ஓபிஎஸ் அணி, அதிமுக அம்மா அணி என இரண்டு பிரிவுகளாக இருக்கும் நிலையில் தற்போது தினகரனுக்கு என்று ஒரு அணி சேருகிறது.

சபாநாயகர் நீங்கலாக அதிமுகவில் 134 எம்.எல்.ஏ க்கள் தற்போது 3 அணிகளில் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.ஓபிஎஸ்அணியில் ஏற்கனவே 12எம்.எல்.ஏ க்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. எடப்பாடி அணியில் அமைச்சர்கள் உட்பட 122 எம்.எல்.ஏ க்கள் இருந்தனர். தற்போது எடப்பாடி அணியில் இருந்து விலகி சுமார் 25 எம்.எல்.ஏ க்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் எடப்பாடி பழனிசாமி அணியின் பலம் தற்போது 97-ஆக குறைந்துள்ளது.

எடப்பாடி ஆட்சி கவிழுமா ?

எடப்பாடி அணியின் பலம் 97-ஆக குறைந்ததால் பேரவையில் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாத சூழல் உருவாகிவிடும். பேரவயைில் 118எம்.எல்.ஏ க்கள்இருந்தால் தான் பெரும்பான்மை பலம் உள்ளதாக கருதப்படும். எனவே எடப்பாடி அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் கனவுடன் டிடிவி தினகரன் ஆர்.கே நகரில் போட்டியிட்ட நிலையில், இப்போது மீண்டும் அதற்கான காய் நகர்த்தலை தொடங்கியுள்ளார் போல் தெரிகிறது.

மேலும் படிக்க