சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் நேரில் பார்க்க விருப்பமாக உள்ளதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் 2017ம் ஆண்டிற்கான சாம்பியன் டிராபி தொடர் நடந்து வருகிறது. ஜூன் 1ம் தேதி இத்தொடர் தொடங்கியது. இதில், இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் கடந்த ஞாயிறன்று விளையாடியது. இதில் 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது
இதற்கிடையில், இப்போட்டியின் போது இந்தியாவில் தேடப்படும் தொழிலதிபர் விஜயமல்லையா ஜாலியாக அமர்ந்து போட்டியை கண்டு ரசித்திருந்தார். அவர் போட்டியை பார்க்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில், விஜயமல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில்,
நான் இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண வந்தது. சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பெரிதாக பேசப்பட்டது.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் நேரில் பார்க்க நான் வருவேன் எனக் கூறியுள்ளார். மேலும் விராட் கோலி உலக தரம் வாய்ந்த கேப்டன். அவர் ஒரு ஜெண்டில்மேன் என்றும் மல்லையா கூறியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு