• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

யோகி ஆதித்யநாத்துக்கு 16அடி நீள சோப்பு அனுப்பிவைத்த திருமாவளவன்

June 5, 2017

உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு 16 அடி நீள சோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உத்தரபிரேச மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கிற ஆதித்தியநாத்தின் வருகையொட்டி தலித் மக்கள் குளித்துவிட்டு வரவேண்டும் என்று சொல்லி உத்தரபிரதேச அரசாங்கத்தின் சார்பில் சோப்பும், ஷாம்புவும் வழங்கப்பட்டுள்ளது.

இது தலித் மக்களை இழிவுப்படுத்தும் செயலாகும். இதற்கு உத்தரபிரதேச முதலமைச்சர் பகிரங்கமாக மன்னிப்புகேட்க வேண்டும்.

ஆதித்தியநாத்முதலில்சாதிஅழுக்கிலிருந்துதன்னைசுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் அதற்காக அவருக்கு16 அடி நீளமுள்ள சோப்பு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு தலித்துகள் மீதான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு வருகிறது. உத்தரபிரதேசத்தில் அவர்கள் ஆட்சி அமைந்ததற்குப் பிறகு வகுப்புவாதிகள் இன்னும் வெறிகொண்டு அலைகின்றனர் என திருமாவளவன்அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க