• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விண்ணில் சீறி பாய்ந்தது அதிக அளவு எடையை சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி எம்கேIII டி1 ராக்கெட் !

June 5, 2017 தண்டோரா குழு

இந்திய வரலாற்றிலேயே அதிக அளவு எடையை சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி எம்கே 3-டி1 ராக்கெட் ஜிசாட்-19செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திஇஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்தனர்.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பான ஜிஎஸ்எல்வி எம்கே 3-டி1
ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 5.28 மணிக்கு விண்ணில் ஏவப்பபட்டது. முன்னதாக இதற்கான 25 மணி நேரம் 30 நிமிட கவுன்டவுன் நேற்று மாலை 3.58 மணிக்கு தொடங்கியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்,இஸ்ரோ விஞ்ஞானிகளால் முழுக்க, முழுக்க இந்திய தொழில்நுட்பத்தால்ஆன அதிநவீன ஜிசாட்-19 செயற்கைக்கோள் உருவக்கப்பட்டது.நான்காயிரம் கிலோ எடையுள்ள செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் திறனுடன் ஜிசாட்-19 வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரயோஜெனிக் இன்ஜின் மூலம் உருவான இந்தச் செயற்கைக்கோள் முற்றிலும் இந்தியத் தயாரிப்புகளால் உருவாக்கப்பட்டதாகும்.

இந்தச் செயற்கைக்கோளின் மொத்த எடை 3,136 கிலோ, இதில் 4,500 வாட்ஸ் திறன் கொண்ட சோலார் பேனல்கள், 2.0 மற்றும் 1.4 மீட்டரில் 2 வகையான ஆன்டனாக்கள், அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 10 ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்ட ஜிசாட்-19 தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக ஜிஎஸ்எல்வி எம்கே 3 – டி1 ரக ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுதப்பட்டது.

அதிக எடைகொண்ட செயற்கைகோள்கள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியன் வகை ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இதை மாற்றியமைக்கும் விதமாக கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை இஸ்ரோ உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க