• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு விடுதிகளில் தங்கி பயில, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரை

June 5, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கென 29 அரசு விடுதிகள் இயங்கி வருகின்றன. இந்த விடுதிகளில் தங்கி பயில பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுக் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; “பிறப்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் கல்லூரி மாணவர்களுக்காக 5 விடுதிகளும், கல்லூரி மாணவியர்களுக்காக 2 விடுதிகளும், பள்ளி மாணவியர்களுக்காக 6 விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்த விடுதிகளில், பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ, தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளும் சேர தகுதி உடையவர்கள் ஆவர்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவர் மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

இவ்விடுதிகளில் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் சீருடைகள் வழங்கப்படும், மேலும் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் புத்தகம் வழங்கப்படும். மாணவ மாணவியர்கள் சேர்க்கைக்கு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும், இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ மேல் இருத்தல் வேண்டும்.

மாணவியர்களுக்கு இவ்விதி பொருந்தாது. தகுதியுடைய மாணவ மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக்காப்பாளர்களிடமிருந்தோ, மாவட்ட பிறப்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் www.tn.gov./bcmbcdept – என்ற இணையதள முகவரியிலும் தரவிரக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி மாணவர்கள் 20.06.2017 க்குள்ளும், கல்லூரி விடுதிகளில் மாணவ மாணவியர்கள் 15.07.2017க்குளும் சம்பந்தப்பட்ட விடுதிக்காப்பாளரிடமோ அல்லது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

மாணவ மாணவியர்கள் விண்ணப்பிக்கும்போது, சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே அனைவரும் இச்சலுகையினை பயன்படுத்தி சிறந்த கல்வியினை பெற வேண்டும்.”

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க