• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘யூ டூப்’பை பார்த்து விமானம் தயாரித்த கார் மெக்கானிக்

June 5, 2017 தண்டோரா குழு

கம்போடியா நாட்டை சார்ந்த கார் மெக்கானிக் ‘யூ டூப்’ இளையதளத்தை பார்த்து சொந்த விமானம் தயாரித்துள்ளார்.

கம்போடியாவை சேர்ந்த லாங்(3௦ விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தற்போது அவர் ஒரு கார் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். அவருடைய ஒரே விருப்பம் விமானங்கள் தயாரிப்பது ஆகும்.

சிறுவயது முதல் விமானம் மீது ஆர்வம் கொண்ட அவர், ரகசியமாக விமானம் ஒன்றை தயாரிக்க தொடங்கினார். அதற்காக அவர் ‘யூ டூப்’ இளையதலத்தில் விமானம் தயாரிக்கும் காணொளிகளை பார்த்தார்.

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் பயன்படுத்திய போர் விமானம் ஒன்றை வாங்கினார். அதை சரி செய்யும் முயற்சியில் இறங்கினார். ஒற்றை இருக்கை கொண்ட அந்த விமானத்திலிருந்த பழைய கருவிகள் மற்றும் பொருள்களை உருக்கி அவற்றை புதியதாக மாற்றினார்.

மார்ச் மாதம் 8-ம் தேதி, தான் தயார் செய்து வைத்திருந்த விமானத்தில் ஏறி 5௦ மீட்டர் உயரத்தில் பறந்தார். ஆனால், விமானம் பூமியில் விழுந்தது. இதை பார்த்த மக்கள் அவரை எள்ளி நகையாடினர். ஆனாலும், மனம் தளராமல் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெற்றார்.

“என்னுடைய கணவரின் பாதுகாப்பு குறித்து சிறிது கலக்கமாக இருக்கிறது. எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். விமாங்கள் எப்படி செயல்படும் என்று எனக்கு தெரியாது. அவருக்கு நல்ல வழிகாட்ட யாரும் இல்லை. இதை விட்டுவிடும்படி என் கணவரிடம் கூறினேன். ஆனால், இது எந்த ஆபத்தும் விளைவிக்காது என்று கூறினார்” என்று லாங்கின் மனைவி கூறியுள்ளார்.

மேலும் படிக்க