• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘என்னிடம் மிரட்டி பணம் பறிக்க முயற்சி நடக்கிறது’ – மாரியப்பன்

June 5, 2017 தண்டோரா குழு

சதீஷ்குமார் இறந்த விவகாரத்தை வைத்து என்னிடம் மிரட்டி பணம் பறிக்க முயற்சி நடக்கிறது என பார ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் புகார் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்க பதக்கம் வென்றவர் சேலத்தை சார்ந்த மாரியப்பன். இரண்டு நாட்களுக்கு முன் மாரியப்பன் கார் மீது அதே ஊரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் மோதினார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது இதனை அடுத்து கார் சேதம் அடைந்தது குறித்து சதீஷ்குமார் குடும்பத்தினரிடம் மாரியப்பன் புகார் கூறியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில்,நேற்று இரவு சதீஷ்குமார் ரயில் தண்டவாளம் அருகே பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

சதீஷ்குமார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே சதீஷ்குமார் மர்ம மரணத்திற்கு மாரியப்பன் தான் காரணம் என சதீஷ்குமார் குடும்பத்தினர் புகார் கூறி வருகின்றனர். இந்த புகாருக்கு மாரியப்பன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ” என் கார் மீது சதீஷ்குமார் பைக் மோதிய போது அவர் மது அருந்தியிருந்தார். கார் சேதம் அடைந்தது குறித்து அவரது பெற்றோரிடம் புகார் கூறினேன். சதீஷ்குமார் தற்கொலையை வைத்து என்னிடம் பணம் பறிக்க முயற்சி நடக்கிறது.” என்றார்.

மேலும் படிக்க