• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிரம்ப் தலையுடன் போஸ் கொடுத்த நடிகை!

June 2, 2017 தண்டோரா குழு

அமெரிக்க அதிபர் டிரம்பின் வெட்டப்பட்ட பொம்மை தலையுடன் நடிகை கிரிபின் போஸ் கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக இருந்து வருபவர் நடிகை கிரிபின். இவர் அண்மையில் புகழ் பெற்ற புகைப்படக்காரர் டைலர் ஷீல்ட்ஸ் உடன் இணைந்து போட்டோ ஷூட் எடுத்துள்ளார். அதில் சில புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அவற்றில் அமெரிக்க அதிபர் டிரம்பின் ரத்தம் நிறைந்த வெட்டப்பட்ட பொம்மை தலையுடன் கிரிபின் இருப்பது போன்ற புகைப்படமும் வெளியாகியுள்ளது.

அப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மேலும், பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு கடும் கண்டனங்கள் கிளம்பின.

இதையடுத்து, கிரிபின் 31 விநாடிகள் ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.அந்த வீடியோவில் இந்த புகைப்படங்களுக்கான எதிர்விளைவுகளை நான் கண்டேன். அந்த புகைப்படம் மக்களை எந்தளவு பாதித்துள்ளது என்பதனை புரிந்து கொண்டேன். இது கேலிக்குரியது இல்லை என தெரிந்து கொண்டேன். இதற்காக மன்னிப்பு கோருகிறேன். நான் தவறாக நடந்து கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில்,

கிரிபின் தனது செயலுக்காக வெட்கப்பட வேண்டும். இந்த புகைப்படத்தினை கண்ட எனது குழந்தைகள், குறிப்பாக, 11 வயது நிறைந்த என்னுடைய மகனான பேரன் வருத்தமடைந்துள்ளான் என தெரிவித்துள்ளார்.

மேலும், கிரிபினின் இந்த செயலுக்காக வருட கணக்கில் போடப்பட்ட அவரது ஒப்பந்தத்தினை சி.என்.என். தொலைக்காட்சி நிறுவனம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க