• Download mobile app
19 Oct 2025, SundayEdition - 3539
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் மோடியின் சாட்டையடி.

May 7, 2016 தண்டோரா குழு

ஆக்கப் பூர்வமான, திறமையான ஆட்சியை நடத்தி நாட்டை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்வதே அரசின் தாரக மந்திரம் என்று பிரதமந்திரி மோடி பதவியேற்றவுடன் பிரகடனம் செய்தார்.

ஆட்சியின் சிறப்பிற்கு அதிகாரிகளின் திறமையும், ஒழுக்க முறையுமே ஆணி வேர் என்பது அவரது அழுத்தமான கருத்து.

ஒழுங்கற்ற, அலட்சியப் போக்கான, நாணயமற்ற, திறமையற்ற, பொறுப்பற்ற, சோம்பித்திரியும், வேலையில் சுணக்கம் காட்டும், அலுவலர்களை அரசு எப்பொழுதுமே பொறுத்துக் கொள்ளாது என்றும் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

அந்த வழியின்படி தற்போது அரசு 33 மூத்த வருவாய்த் துறை அதிகாரிகளைக் கட்டாய பணி ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி ஆணையிட்டுள்ளது அரசு.

பதவிக்கு வந்த இந்த 2 ஆண்டுகளில் 72 அதிகாரிகளை ஒழுங்கு நடவடிக்கை காரணமாகப் பணி நீக்கம் செய்துள்ளது.

ஆனால் இது போன்று ஒட்டு மொத்தமாக 33 அதிகாரிகளை நீக்கியது இதுவே முதன் முறையாகும்.

இந்த 105 பேரும் கிளாஸ் 1 அதிகாரிகளாவர். அனைவரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

திறமையற்ற ஆக்கப்பூர்வமற்ற, செயல் பாடுகள் தங்களது பதவியை எந்தவிதத்திலும் பாதிக்காது என்ற எண்ணம் கொண்ட மற்ற அலுவலர்களுக்கு அரசின் இந்த நடவடிக்கை ஒரு புரிந்துணர்தலாக இருக்கும் என்பது மூத்த அதிகாரிகளின் கருத்து.

அரசு அலுவலர்களின் அலட்சியப் போக்கைப் பற்றியும், பொது மக்களை அலைக்கழிக்கும் மனப்பான்மையைப் பற்றியும், பல துறைகளிலிருந்து, பிரதம மந்திரிக்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

ஜனவரி மாதம் நடந்த கருத்துப் பரிமாற்றக் கூட்டத்தில், பிரதமர் மோடி அனைத்துத் துறை தலைமை அதிகாரிகளிடத்தும், ஆக்கப்பூர்வமற்ற திறமையற்ற அதிகாரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஆணையிட்டார்.
மேலும் அத்தகைய அதிகாரிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறும் அறிவுத்தியுள்ளார்.

அந்தப் பட்டியலில் 34 துறையைச் சேர்ந்த 122 துணைச் செயலர் பதவி வகிக்கும் அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.

7 பேர் பாதுகாப்புத் துறையையும், 13 பேர் கல்வித் துறையையும், 7 பேர் சுகாதாரத் துறையையும், 6 பேர் தொழில் துறையையும், மற்றும் சிலர் உளவுத் துறையையும் மற்றவர்கள் மற்ற பல முக்கியத் துறைகளையும் சேர்ந்தவர்களாவார்கள்.

அந்தந்த துறைகளுக்கு இந்த அதிகாரிகளின் செயல் திறன் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் துறைகளை அடிக்கடி மாற்றுவதன் மூலம் அவர்களது முழுத் திறமையையும் உபயோகித்துக் கொள்ள முடியுமா என்றும் அரசு முயற்சி செய்து வருகிறது.

மேலும் படிக்க