• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாணவியை மாடியிலிருந்து கீழே தள்ளிய ஆசிரியர்கள்

May 30, 2017 தண்டோரா குழு

பாகிஸ்தானில் பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்யாத காரணத்தால், இரண்டு பள்ளி ஆசிரியர்கள் மாணவியை மாடியிலிருந்து கீழே தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள ஒரு பள்ளியில், பஜ்ஜர்நூர்.(14), 9 வது வகுப்பு படித்து வருகிறார். உடல் நலம் சரியில்லாத காரணத்தால், பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். அதை கேட்ட, அப்பள்ளியின் ஆசிரியர்கள் பள்ளி மாடியிலிருந்து அவளை கீழே தள்ளியுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த மாணவி கூறுகையில்,

“மே 23ம் தேதி, வகுப்பறையை சுத்தம் செய்வதற்கான என்னுடைய முறை வந்தது. அன்று எனக்கு உடல் நலம் சரியில்லை. அதனால் மற்றொரு நாள் சுத்தம் செய்கிறேன் என்று என்னுடைய வகுப்பு ஆசிரியர்களான புஷ்ரா மற்றும் ரெஹானா ஆகியோரிடம் கூறினேன். உடனே,அவர்கள் வேறு அறைக்கு என்னை அழைத்து சென்று, இருவரும் அடித்தனர். பள்ளியின் மூன்றாவது மாடிக்கு அழைத்து சென்று, அதை முழுவதும் சுத்தம் செய்யும்படி கூறினர். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன்.இதையடுத்து, பள்ளியின் மேல்தளத்திலிருந்து அவர்கள் என்னை கீழே தள்ளிவிட்டனர்” என்று கூறினார்.

இது குறித்து பஞ்சாப் கல்வி செயலாளர், அல்லா பக்ஸ் மாலிக் கூறுகையில்,

“இந்த சம்பவம் மே 23ம் தேதி நடந்துள்ளது. ஆனால் பள்ளி நிர்வாகமும் சில அதிகாரிகளும் அதை மறைத்து விட்டனர். எங்களுக்கு இது குறித்து சனிக்கிழமை(மே 27) தான் தெரியவந்துள்ளது.

மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் தலைமை ஆசிரியர் நக்மானா இர்ஷாத் ஆகியோர் சம்பவத்தை மறைத்தற்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பத்திற்கு காரணமான இரண்டு ஆசிரியர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து முதல்வர், சிறப்பு காவல்துறை பிரிவுக்கு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் காயமடைந்த அந்த மாணவியின் மருத்துவ செலவை அரசே ஏற்றுக்கொள்ளும்” என்றார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் என் மகளை அதிகாரி மாலிக் வந்து சந்தித்தார். என் மகள் மாடிப்படியிலிருந்து கீழே விழுந்து விட்டாள் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. மகளை அழைத்துக்கொண்டு மாயோ மருத்துவமனைக்கு சென்றபோது, அவளுக்கு பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்றும் அவளுடைய முதுகு தண்டும் உடைந்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அவளை குர்கி மருத்துவமனையின் எலும்பு முறிவு பிரிவுக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் கூறினர்” என்று நூரின் தாயார் தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரி கூறுகையில்,

“சட்ட பிரிவு 324ன் கீழ் இந்த சம்பவத்துக்கு காரணமான இரண்டு ஆசிரியர் மீது ஏப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

மேலும் படிக்க