• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பசுவதை தடை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை

May 30, 2017 தண்டோரா குழு

பசுவதை தடை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரளாவில் மாட்டுக்கறி திருவிழா நடத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தமிழகத்திலும் போராட்டங்கள் நடந்து வருகிறது.இந்நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஸ்டாலின், திருநாவுகரசர், முத்தரசன், ராமகிருஷ்ணன், திருமாவளவன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

பசுவதை தடுப்பு சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். உணவுக்கான உரிமையை மத்திய அரசின் முடிவு தகர்த்து எறிகிறது.மத்திய அரசின் முடிவு ஒற்றை கலாசாரத்தை திணிக்கும் பண்பாட்டு சர்வாதிகாரம். எதை உண்ண வேண்டும் என்பதை நிர்ணயிக்க அரசுக்கு யார் அதிகாரம் அளித்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.தமிழக அரசு மவுனத்தை கலைத்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க