• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

4 வயது சிறுவனை தாக்கிய சிறுத்தை

May 29, 2017 தண்டோரா குழு

மும்பை நகரின் கோரிகோன் பகுதியில் தந்தையுடன் சென்றுக்கொண்டிருந்த 4 வயது சிறுவனை சிறுத்தை தாக்கிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை புறநகர் பகுதியில் கோரிகோன் என்னும் பகுதி உள்ளது. அங்குள்ள ஆரே காலனியிலுள்ள ராயல் பாம்ஸ் என்னும் இடத்தில் அசோக் ஷா என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் சனிக்கிழமை(மே 27), தனது நான்கு வயது மகனுடன் அதிகாலை நடைபயிற்சி செய்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த சிறுத்தை ஒன்று, அந்த சிறுவனை தாக்க முயற்சி செய்தது. இதைக் கண்ட அசோக் ஷா அதிர்ச்சியில் சத்தமிட்டுள்ளார். உடனே சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

காயமடைந்த சிறுவனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் அவனுடைய மார்பு பகுதியில் இரண்டு சிறிய தையல் போட்டுள்ளனர்.

ஆராய்ச்சியாளர் டாக்டர் வித்யா அத்ரேயா, சிறுத்தைகளை விரிவாக ஆய்வு செய்பவர். இச்சம்பவம் குறித்து அவர் கூறுகையில், “ சிறுத்தைகளின் கண்பார்வை மிகவும் கூர்மையானது. பூனை இனத்தை சேர்ந்த சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் வசிக்கும் இடத்தை சுற்றி வாழும் மக்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்” என்றார்.

வனத்துறை அதிகாரி கூறுகையில்,

“மக்கள் வசிக்கும் இடத்திலிருந்து 2௦ மீட்டர் தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுத்தையை கண்டுபிடிக்க அந்த இடம் முழுவதிலும் சிசிடிவி கேமாரா பொருத்தப்பட்டுள்ளது,” என்றார்.

கோரிகோன் பகுதியில் கடப்படா என்னும் இடத்தில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுவன், சிறுத்தைக்கு இரையான சம்பவம் இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க