• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாளையம் நகர நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டன

May 29, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்டம் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின் இந்திய மின் ஆளுமை நில பதிவுகள் மேலாண்மை திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் நகராட்சியின் நகர நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு இணையவழி சேவையாக இன்று முதல் மாற்றப்பட்டுள்ளன.

இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டு திங்கட்கிழமை (மே-29) காலை 11.00 மணி அளவில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், மக்கள் குறை தீர்ப்பு கூட்ட அரங்கில் இச்சேவையை தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியிலுள்ள நிலங்களுக்கு இணையவழியில் பட்டா மாறுதல் மனுக்களை எளிதில் சமர்ப்பிக்கலாம். இனி வருங்காலங்களில் பொதுமக்கள் நகர்புற நில ஆவணங்கள் நகல்களை பெற அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை.

இணையவழி சேவையின் மூலமாக எளிதாகவும் விரைவாகவும் எப்பொழுதும் எங்கிருந்தும் நகர நிலப் பதிவேட்டின் நகல்களை wwww.tn.gov.in/eservices என்ற இணைய பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், இச்சேவையை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.

மேலும் கோவை மாநகரத்தில் உள்ள கோவை, பொள்ளாச்சி நகர்ப்புற ஆவணங்களும் மற்றும் நகர்புற பிளாக் வரைபடங்களும் கணினி மூலம் வரைவு செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளதாகவும் இந்த வரைபடங்களும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இணையவழி சேவையின் மூலம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பொது மக்கள் குடியிருந்து வரும் மனை நத்தம் பகுதிகளுக்கான ஆவணங்களும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நில ஆவணங்கள் விரைவில் இணையவழி சேவைக்கு விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, தேசிய தகவல் மைய தகவல் அலுவலர் ரவிக்குமார், உதவி தகவல் அலுவலர் வெங்கடேஷ், பராமரிப்பு ஆய்வாளர்கள் தவமணி அயூப்ஜான, கோபாலகிருஷ்ணன் தொழில்நுட்ப மேலாளர்(பொறுப்பு) முத்துராஜா, கண்காணிப்பாளர் மோகன், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் ரங்கராஜ், வட்டத்துணை ஆய்வாளர் சிவகுருநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் இதர உயர் அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க