• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அழகி போட்டிக்கு ஒரிசாவை சேர்ந்த 12 வயது சிறுமி தேர்வு

May 29, 2017 தண்டோரா குழு

ஜார்ஜியாவில் நடைபெறவிருக்கும் லிட்டில் மிஸ் யுனிவர்ஸ் (Little Miss Universe) அழகி போட்டிக்கு ஒரிசாவை சேர்ந்த 12 வயது சிறுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இந்த அழகி போட்டி இம்மாதம் 31-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த போட்டிக்கு, ஓரிசா மாநிலத்தை சேர்ந்த பத்மாலயா நந்தா(12) வயது சிறுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கட்டாக் நகரிலுள்ள ஸ்டீவர்ட் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள் பத்மாலயா. அவளுடைய தந்தை பிரசன்னா குமார் நந்தா உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.

கேரளா மாநிலத்தின் கோழிக்கோடில் நடந்த ஜூனியர் மாடல் சர்வதேச போட்டியில் பத்மாலயா நந்தா ‘லிட்டில் மிஸ்’ (Little Miss) பட்டத்தை வென்றார். இதன் காரணமாக ஜார்ஜியாவில் நடைப்பெறும் அழகி போட்டியிலும், கிரீஸ் நாட்டில் நடைப்பெறும் மற்றொரு அழகி போட்டியிலும் கலந்துக்கொள்ளவுள்ளார்.

இது குறித்து பத்மாலயா நந்தா கூறுகையில்

“இந்தியாவின் பிரதிநிதியாக இரு நாடுகளில் நடைபெற உள்ள அழகிப் போட்டியில் கலந்துக்கொள்ள போவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இதற்காக நான் எடுத்துக்கொண்ட கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

இந்த இரண்டுப் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுவேன். பேஷன் வடிவமைப்பு மற்றும் மாடலிங் செய்ய விருப்பமுண்டு. ஆனால் தற்போது, என்னுடைய படிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். என் பெற்றோர்கள் தந்த ஊக்கம் தான் இந்த வெற்றிக்கு காரணம்” என்றார்.

மேலும் படிக்க