May 27, 2017
தண்டோரா குழு
மகாராஷ்டிராவில் பாம்புக்கு முத்தம் கொடுத்த இளைஞர். பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பன்வேல் நகரை சேர்ந்தவர் அஜய் பவார். பாம்பு ஒன்றை மீட்டு அதற்கு முத்தம் கொடுக்க முயன்றபோது, அது அவருடைய உதட்டில் கடித்துவிட்டது. அதன் பின் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் அவர் உயிர் பிழைத்தார்.
அவரை வனத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை(மே 25) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தினர். இதை விசாரித்த நீதிபதி அஜய்யை 5 நாள் காவலில் வைத்திருக்க உத்தரவிட்டார்.
அஜய் மீது, தானே நகரில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று புகார் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தானே நகர் வனத்துறை அதிகாரி சுனில் லிமாயே கூறுகையில், “சட்டத்தைத் மீறுவோர் மீது கடுமையான தண்டனை விதிக்கப்படும்” என்று கூறினார்.