• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பஞ்சாபின் முன்னாள் டி.ஜி.பி. கண்வர் பல் சிங் மறைவு

May 26, 2017 தண்டோரா குழு

பஞ்சாபின் முன்னாள் டி.ஜி.பி. கண்வர் பல் சிங்(82) மாரடைப்பால் மே 26-ம் தேதி உயிரிழந்தார்.

கண்வர் பல் சிங் உடல்நலக்குறைவால் புதுதில்லி ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனியில் மே 18-ம் தேதி சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மே 26-ம் தேதி மதியம் 2.25 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் காலமானார்.

“இஸ்செமிக்’ என்னும் இருதய நோயாலும், சிறுநீரக செயலிழப்பாலும் அவதிப்பட்டு வந்தார்” என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

‘சூப்பர் காப்’ என்று அழைக்கப்பட்ட அவர், 1988 முதல் 1995-ம் ஆண்டு ஓய்வு பெறும் வரை பஞ்சாப் போலீசின் டி.ஜி.பி., பதவியில் இருந்தார். அவருடைய சிவில் சேவைக்காக 1989-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

மேலும், Institute for Conflict Management தலைவர் மற்றும் Indian Hockey Federation தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

மேலும் படிக்க