• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உ.பி முதல்வரை சந்திக்க தலித் மக்களுக்கு நிபந்தனைகள் போடப்பட்டதா?

May 26, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேஷ் முதலமைச்சரை தலித் மக்கள் சந்திக்கும் முன் சோப்பு, ஷாம்பூ போட்டு குளித்த பிறகு சந்திக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிடப்பட்டதாக வெளியான தகவல், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேஷ் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று(மே 25) குஷிநகர் மாவட்டத்திலுள்ள மணிப்பூர் கோட் என்னும் கிராமத்திற்கு சென்றிருந்தார்.

அங்குள்ள எலி பிடிக்கும் ‘முஷார்’ என்னும் இனத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். முதலமைச்சர் அங்கு வருவதால், அவரை சந்திக்கும் முன், சோப்பு மற்றும் ஷாம்பூ போட்டு குளித்துவிட்டு சந்திக்க வேண்டும் என்று அந்த மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் எனத் தகவல் வெளியானது.

இதுக்குறித்து அந்த கிராமத்தில் வசிக்கும் ஒருவர் கூறுகையில்,

“இதுவரை இந்த கிராமத்தை கண்டுக்கொள்ளாத மூத்த அதிகாரிகள் கிராமத்திற்கு வந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தோம். புதிய கழிவறைகள் கட்டப்பட்டன. தாறுமாறாக இருந்த சாலைகள் செப்பனிடப்பட்டன. தெரு விளக்குகள் போடப்பட்டன. வாசனை நிறைந்த சோப்புகள், ஷாம்பூ மற்றும் சென்ட் ஆகியவற்றை கொடுத்தனர். முதலமைச்சரை சந்திப்பதற்கு முன் அவற்றை பயன்படுத்தி உங்களை சுத்தமாக வைத்திருங்கள். அதேபோல் உங்கள் வீடுகளையும் சுத்தமாக வைத்திருங்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்” என்று கூறினார்.

சில நாட்களுக்கு முன், அம்மாவட்டத்தின் தியோரியா மாவட்டத்தை சேர்ந்த, ஜம்மு காஷ்மீரில் பணிபுரிந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் பிரேம் சாகர் வீரரின் குடும்பத்தை சந்திக்க முதல்வர் செல்வதிற்கு முன்பு, சாலைகள் சரி செய்யப்பட்டது.

படை வீரரின் வீட்டில் விளக்குகள் போடப்பட்டது. முதல்வர் அமரும் அறையில் குளிர் சாதன இயந்திரம் வைக்கப்பட்டது. ஆனால், அவர் அங்கு வந்து சென்ற பிறகு, வீரரின் வீட்டில் வைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும், திரும்பி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க