• Download mobile app
03 Dec 2025, WednesdayEdition - 3584
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

40 ஆண்டுகள் நீடிக்கும் ஐந்து பைசா பிரச்சனை.

May 5, 2016 தண்டோரா குழு

73 வயதில் எல்லோரும் வாழ்க்கையின் கடமைகளை முடித்து விட்டு புனித பயணம் மேற்கொள்ளுவார்கள். ஆனால் நானோ 40 வருடங்களாக நீதிமன்றத்திற்கு நடந்து கொண்டிருக்கிறேன் என்கிறார், ரன்வீர் சிங் யாதவ்.

ரன்வீர் சிங், 1973ஆம் ஆண்டு, டில்லி போக்குவரத்து துறையில் நடத்துநராக பணியாற்றி வந்தார்.

ஒரு முறை பணியில் இருக்கும் பொது, ஒரு பெண் பயணியிடம் 15 பைசா பெற்று 10 பைசாவிற்கு மட்டுமே சீட்டு கொடுத்து விட்டு மீதி 5 பைசாவை அவர் எடுத்துக் கொண்டதாக கூறப்பட்டது. எதிர்பாராத விதமாகப் போக்குவரத்துக்கு துறை சோதனை அதிகாரி அந்த நேரத்தில் சோதனையிட வந்தார்.

சோதனையின் போது ரன்வீர் சிங் 5 பைசா கையாடல் செய்தது தெரிய வந்தது.
இது குறித்து ரன்வீர் சிங்கிற்கு எதிராக டில்லி போக்குவரத்து துறை, தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

இதையடுத்து ரன்வீர் சிங் பணி நீக்கம் செய்யப்பட்டார். தான் அந்த 5 பைசாவை எடுத்துக்கொள்ள வில்லை என்று அவரும் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த தொழிலாளர் நீதிமன்றம், கடந்த 1990ஆம் ஆண்டு, அவரது பணி நீக்கம் செல்லாது என அறிவித்தது.

ஆனால் டில்லி போக்குவரத்துக்கு துறை அடுத்த வருடமே வழக்கை உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இது வரை இரு தரப்பினரும் பல லட்சங்களில் வழக்கு செலவு செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது. அது மட்டுமல்லாமல், டெல்லி போக்குவரத்து துறை ரன்வீருக்கு, பணிகொடையாக 1.28 லட்சம் ரூபாயும், 1.37 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க உத்தரவிட்டது.

மேலும் வழக்காடு தொகையாக 30,000 ரூபாய் ரன்வீருக்கு உடனே கொடுக்க உத்தரவிட்டது.

40 வருடங்களாகத் தொழிலாளர் நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் ரன்வீருக்கு சாதகமாக தீர்ப்பு வந்த போதிலும், அதன் பயன் அவருக்கு இன்னும் கிடைக்காதது குறித்து நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

வழக்கு இன்னும் முடிவுபெறாத நிலையில், வருகிற 26ஆம் தேதி கர்கர்டூமா நீதிமன்றத்தில் அடுத்த விசாரணை நடக்கவுள்ளது.

5 பைசா செல்லாது என இந்திய அரசாங்கம் அறிவித்துப் பல ஆண்டுகள் ஆகியும், இந்த வழக்கு எங்களை விட்டபாடில்லை எனவும்,

5 பைசவானாலும், 2 பைசாவானாலும் இந்த வழக்கு தங்களுக்கு மிகுந்த மன வேதனையைத் தருவதாகவும், இந்த வழக்கை அரசு அதிகாரிகள் எடுத்துச் சென்ற விதம் வருத்தத்திற்குரியது என்றும் ரன்வீரின் மனைவி தெரிவித்தார்.

மேலும் படிக்க