• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூன்று ரயில்நிலையங்களில் புதிய பயணச்சீட்டு முன்பதிவு தொடக்கம்

May 25, 2017 தண்டோரா குழு

பெத்தநாயக்கன்பாளையம், ஊத்துக்குளி மற்றும் சித்தலவாய் ஆகிய ரயில் நிலையங்களில் புதிய பயணச்சீட்டு முன்பதிவு வசதி தொடங்கப்பட்டுள்ளது.

ரயல் பயணிகள் தங்களது பயணத்திற்கான முன்பதிவுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்ள வசதியாக, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் , திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மற்றும் கரூர் மாவட்டம் சித்தலவாய் ஆகிய ரயில் நிலையங்களில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா உத்தரவின் பேரில் புதிய பயணச்சீட்டு முன்பதிவு வசதி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

கீழ்க்குறிப்பிட்டுள்ள நேரங்களில் பயணிகள் தங்களது பயணத்திற்கான பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். மற்ற நேரங்களில் அந்த கவுண்டர்களில் முன்பு உள்ளது போல் முன்பதிவற்ற பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் ரயில் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறும் சேலம் ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க